- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் பரத் நடித்துள்ள படத்தின் முன்னோட்ட காட்சி இணையத்தில் வைரல்
நடிகர் பரத் நடித்துள்ள படத்தின் முன்னோட்ட காட்சி இணையத்தில் வைரல்
By: Nagaraj Thu, 27 July 2023 4:59:22 PM
சென்னை: நடிகர் பரத்தின் லவ் படத்தின் முன்னோட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான மிரள் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான பரத் தற்போது 50வது படமாக ‘லவ்’ படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது. மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்ற லவ் படத்தின் தமிழ் ரீமிக்கை தயாரித்து இயக்கியுள்ளார் ஆர்.பி.பாலா.
இந்தப் படத்திற்கு இசை- ரோனி ரஃபேல். ஒளிப்பதிவு- பி.ஜி. முத்தையா. ற்போது, இப்படத்தின் முன்னோட்ட காட்சி (ஸ்னீக் பீக்) விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் கோடையின் வாசலிலே என்று தொடங்கும் பாடலை முன்னதாக படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.