- வீடு›
- பொழுதுபோக்கு›
- விடுதலை படத்தின் டிரைலர் வெளியாகி செம ட்ரெண்ட்
விடுதலை படத்தின் டிரைலர் வெளியாகி செம ட்ரெண்ட்
By: Nagaraj Sat, 11 Mar 2023 6:57:34 PM
சென்னை: சமூக வலை தளங்களில் ட்ரெண்ட்... இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இளையராஜா இசையமைக்கும் படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடல் சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் குரலில் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இதையடுத்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று முன்தினம் (மார்ச் 8) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விடுதலை படத்தில் இடம் பெற்றுள்ள அருட்பெரும் ஜோதி பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளையராஜா குரலில் உருவாகி வெளியாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்