Advertisement

மாமன்னன் படத்தின் டிரெயிலர் போஸ்டர் செம வைரலாகிறது

By: Nagaraj Fri, 16 June 2023 11:14:43 PM

மாமன்னன் படத்தின் டிரெயிலர் போஸ்டர் செம வைரலாகிறது

சென்னை: மாமன்னன் படத்தின் டிரெயிலர் போஸ்டர் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே முக்கியமான இயக்குநராக பெயர்யெடுத்துள்ள இயக்குநர் மாரிசெல்வராஜின் மூன்றாவது படைப்பாக வெளிவர உள்ளது மாமன்னன் திரைப்படம்.

இந்நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு மாமன்னன் படத்தில் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மாமன்னன் படத்தில் நடிகர்கள் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பாகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் தான் ஒரு கம்யூனிஸ்டாக நடித்திருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் இசை வெளியிட்டு விழாவின் போது தெரிவித்திருந்தார். அதேபோல், தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியுள்ள அமைச்சர் உதயநிதியின் கடைசி படமாகவும் மாமன்னன் பார்க்கப்படுகிறது.

மேலும், லோகேஷ் கனகராஜியின் விக்ரம் படத்திற்கு பிறகு, தமிழில் மற்றொரு வித்தியாசமான கதாபாத்தில் நடித்துள்ளார் மலையாள சூப்பர் ஸ்டாரான பகத் ஃபாசில்.

mamannan,poster,few hours,first time,viral ,மாமன்னன், போஸ்டர், சிலமணிநேரம், முதல்முறை, வைரல்

இவை எல்லாவற்றையும்விட மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலுவின் தோற்றம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் மற்றும் செண்பகமூர்த்தி மற்றும் அர்ஜூன் துரை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள மாமன்னன் படம் இம்மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குவினர் அறிவித்துள்ளனர். அறிவித்தபடி படத்தின் டிரெயிலர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது.

டிரெயிலர் போஸ்டர் சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. ஒருபக்கம் உதயநிதியின் முகமும், மறுபக்கம் வடிவேலுவின் முகம் இணைந்து நடுவில் ஸ்டேப்லர் அடிக்கப்பட்டுள்ளது போல் மிகவும் வித்தியாசமாகவும் அதேசமயம் வலியை உணரவைக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது மாமன்னன் போஸ்டர் .

இதனை முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு போஸ்டரில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கவே சில மணிநேரம் ஆகும். தற்போது இந்த வித்தியாசமான போஸ்டர் வலைத்தளத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

Tags :
|