Advertisement

பார்பி படத்தை திரையிட வியட்நாம் அரசு தடை விதித்தது

By: Nagaraj Tue, 04 July 2023 7:34:29 PM

பார்பி படத்தை திரையிட வியட்நாம் அரசு தடை விதித்தது

வியட்நாம்: தடை விதிக்கப்பட்டது... வார்னர் ப்ரோஸின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான பார்பி திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிடுவதற்கு வியட்நாம் அரசு தடை விதித்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா உரிமை கோரிவருவதும் புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்ச்சியாக நடந்துவரும் நிகழ்வுகள். அப்பகுதிகளை நைன் டேஸ் லைன் (nine dash line) என சீனா குறிப்பிடுகிறது.

மார்கோட் ராபி மற்றும் ரியான் கோஸ்லிங் நடித்த "பார்பி", முதலில் ஜூலை 21 ஆம் தேதி வியட்நாமில் திரையிட திட்டமிடப்பட்டது. இந்நிலையில் சீனாவால் உரிமை கோரப்பட்ட நிலப்பரப்பைக் காட்டும் வரைபடத்தைக் கொண்ட ஒரு காட்சி வார்னர் பிரதர்ஸின் "பார்பி" திரைப்படத்தில் உள்ளதால் உள்நாட்டில் திரையிட வியட்நாம் தடை விதித்துள்ளது.

barbie movie,vietnam,banned,not licensed ,பார்பி திரைப்படம், வியட்நாம், தடைவிதிப்பு, உரிமம் வழங்கவில்லை

2016 ஆம் ஆண்டு ஹேக் நகரில், சர்வதேச டிரிபியூனலில், 9 டேஸ் லைன் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளை சீனா உரிமை கோருவதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்பின் 2019 ஆம் ஆண்டில், வியட்நாம் அரசு ட்ரீம்வொர்க்ஸின் அனிமேஷன் திரைப்படமான "அபோமினபிள்" மற்றும் கடந்த ஆண்டு சோனியின் அதிரடி திரைப்படமான "அன்சார்டர்ட்" ஆகியவையும் இதே காரணத்திற்காக தடைசெய்யப்பட்டிருந்தது.

வெளிநாட்டு படங்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் தணிக்கை செய்யும் துறையின் தலைவரான வி கெய்ன் தான் இது குறித்து கூறுகையில், "பார்பி என்ற அமெரிக்கத் திரைப்படத்தை வியட்நாமில் வெளியிட நாங்கள் உரிமம் வழங்கவில்லை. ஏனெனில் அப்படம் நைன் டேஸ் லைனின் புகைப்படத்தை கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Tags :
|