Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும்...சுஷாந்த் சிங் மறைவுக்கு சானியா மிர்சா உருக்கம்

இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும்...சுஷாந்த் சிங் மறைவுக்கு சானியா மிர்சா உருக்கம்

By: Monisha Mon, 15 June 2020 3:58:30 PM

இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும்...சுஷாந்த் சிங் மறைவுக்கு சானியா மிர்சா உருக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இந்த படம் இவரது திரைப்பட வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிலிருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

hindi actor sushant singh,suicide,sania mirza,tweet ,இந்தி நடிகர் சுஷாந்த் சிங்,தற்கொலை,சானியா மிர்சா,டுவிட்

அந்த வகையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சுஷாந்த் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "சுஷாந்த் மனம் உடைந்துவிட்டது. ஒரு நாள் நீயும் நானும் சேர்ந்து டென்னிஸ் விளையாடலாம் என கூறினாய். எப்போதும் சிரிப்புடன் இருக்கும் நபர் நீ. செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் சந்தோசத்தை பரப்பினாய். ஆனால் நீ இவ்வளவு வலியுடன் இருந்தாய் என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும் என் நண்பரே." என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Tags :