Advertisement

அப்போ லண்டன்… இப்போ பாரிஸ்: அஜித்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Tue, 12 July 2022 6:54:59 PM

அப்போ லண்டன்… இப்போ பாரிஸ்: அஜித்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: கோலிவுட்டில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது ரசிகர்கள் அவரை ஏ.கே என அழைக்கின்றனர்.
ஏ.கேவிற்கு இளம் வயது முதலே ஆட்டோ மொபைல் மீது இருக்கும் அலாதி பிரியம். தீவிர மெக்கானிக்ஸ் பிரியர். அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ் உள்ளிவற்றையெல்லாம் தனது ஃபிரீ டைமில் செய்து வந்தவர்.

france,capital,paris,ajith,fans,photo ,பிரான்ஸ், தலைநகர், பாரிஸ், அஜித், ரசிகர்கள், புகைப்படம்

தற்போது லண்டலில் அவர் பைக் மூலம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ரசிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும். லண்டலில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் அவர் பொருட்களை வாங்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து அஜித் தற்போது ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டைவரை பார்வையிட சென்றிருக்கிறார். அங்கே அவரை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சிலர் கால்பந்து ஜெர்ஸியில் கையெழுத்து கேட்பதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Tags :
|
|
|
|