Advertisement

ஜெயிலர்-2 எடுக்கும் திட்டம் உள்ளது: இயக்குனர் நெல்சன் தகவல்

By: Nagaraj Mon, 14 Aug 2023 7:36:18 PM

ஜெயிலர்-2 எடுக்கும் திட்டம் உள்ளது: இயக்குனர் நெல்சன் தகவல்

சென்னை: ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஐடியா உள்ளது. அதேபோல் கோலமாவு கோகிலா, டாக்டர், மிருகம் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கும் திட்டம் உள்ளது என்று இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

coming,part 2,rajini,the jailer, ,2-ம் பாகம், ஜெயிலர், ரஜினி, வருகிறது,

இந்தப் படத்தின் வசூல் ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக நெல்சன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய அவர், “ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஐடியா உள்ளது. அதேபோல் கோலமாவு கோகிலா, டாக்டர், மிருகம் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கும் திட்டம் உள்ளது.

மேலும், ரஜினிகாந்த், விஜய் இருவரும் மாஸ் நடிகர்கள். . இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் ஆசையும் இருக்கிறது. அது ஒரு பெரிய பணி. நேரம் வரும்போது கண்டிப்பாக செய்வேன்,” என்றார்.

Tags :
|
|
|