Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தை வெளியிட தடையில்லை

By: vaithegi Thu, 13 July 2023 10:39:14 AM

நடிகர் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தை வெளியிட தடையில்லை

நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள மாவீரன் திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். 60 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

இதனை அடுத்து நாளை மறுதினம் இந்த படம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்திற்கு தடை விதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் P.ஜெயசீலன் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார்.

maveeran,sivakarthikeyan ,மாவீரன்,சிவகார்த்திகேயன்


இதையடுத்து அவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய ஜனநாயக கட்சியின் தங்கள் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், , அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, படத்தில் எந்தவித அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என்று 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பு போட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஐஜேகே கொடியை பிரதிபலிக்காதவாறு, காட்சிகளை மாற்றியமைத்த பின்னரே ஓடிடி, சாட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி இந்த வழக்கை முடித்துவைத்தார்.

Tags :