Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இதுக்கு மட்டும் நேரம் இருக்கா... போனிகபூரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இதுக்கு மட்டும் நேரம் இருக்கா... போனிகபூரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

By: Nagaraj Wed, 02 Sept 2020 6:57:58 PM

இதுக்கு மட்டும் நேரம் இருக்கா... போனிகபூரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இதுக்கு மட்டும் நேரம் இருக்கா... அஜித் ரசிகர்கள் செம கடுப்பில் போனி கபூரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். எதற்காக தெரியுங்களா?

மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் உருவான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை வினோத் இயக்க, நடிகர் அஜித் நடித்திருந்தார். வழக்கறிஞராக அஜித் நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இப்படத்திற்கு பின் அதே போனிகபூர் இயக்கத்தில் வினோத் இயக்க வலிமை படத்தில் அஜித் நடித்து வந்தார். அப்படம் பற்றி அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் எவ்வளவு கெஞ்சியும் போனி கபூர் மௌனமே சாதித்து வந்தார். எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை.

ajith fans,silence,ponikapur,anger,update ,அஜித் ரசிகர்கள், மௌனம், போனிகபூர், கோபம், அப்டேட்

எனவே, அவர் மீது ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். இந்நிலையில், நேர் கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஜித் ஏற்ற கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு வக்கீல் சாப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அவ்வளவுதான் இதைக்கண்டு கடுப்பான அஜித் ரசிகர்கள் இதற்கெல்லாம் உங்களுக்கு நேரமிருக்கு.. வலிமை பற்றி அப்டேட் கேட்டால் மட்டும் மௌனம் சாதிக்கிறீர்கள். வலிமை அப்டேட் கொடுப்பியா? மாட்டியா? என கோபத்துடன் டிவிட் செய்து வருகின்றனர்.

Tags :
|