Advertisement

பிக்பாஸ்-6 ல் பங்கேற்கபவர்கள் இவர்கள்தான்... உலா வரும் பட்டியல்

By: Nagaraj Tue, 27 Sept 2022 4:56:27 PM

பிக்பாஸ்-6 ல் பங்கேற்கபவர்கள் இவர்கள்தான்... உலா வரும் பட்டியல்

சென்னை: பிக்பாஸ் சீசன் 6-இல் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுதான் இறுதி பட்டியல் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் போட்டி கடந்த 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்ற பலரும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு மிக பிரமாண்டமாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

bigg boss,contestants,list,website,viral ,பிக்பாஸ், போட்டியாளர்கள், பட்டியல், இணையதளம், வைரல்

இந்த சீசன் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் நேரலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனி, ஞாயிறுகளில் மட்டும் நேரலை செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு சுவாரஸ்யம் நிறைந்த பல்வேறு புதிய ‘டாஸ்குகள்’ வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில், பிரபலம் அல்லாத சாதாரண மக்களில் இருந்து இரண்டு பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கிடையே, இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

1. ரக்சன், 2. ராஜலட்சுமி, 3. தர்ஷா குப்தா, 4. பிரபல தொகுப்பாளர் திவ்ய தர்ஷினி, 5. ஷில்பா மஞ்சுநாத், 6. மோனிகா, 7. கார்த்தி குமார், 8. ஜி.பி. முத்து, 9. அஜ்மல் அமீர், 10. நடிகை கிரண். இவர்கள் தான் அவர்கள் என்று பட்டியல் சமூக இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் பிக் பாஸ் தொடக்க விழாவின் போதுதான் தெரியவரும்.

Tags :
|