- வீடு›
- பொழுதுபோக்கு›
- இந்திய அளவில் மிகவும் பிரபலமான திரைத்துறை நட்சத்திரங்கள் பட்டியலில் மீண்டும் இவர்கள் முதலிடம்
இந்திய அளவில் மிகவும் பிரபலமான திரைத்துறை நட்சத்திரங்கள் பட்டியலில் மீண்டும் இவர்கள் முதலிடம்
By: vaithegi Mon, 24 July 2023 4:30:56 PM
பிரபலமான திரைத்துறை நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் விஜய்யும் நடிகை சமந்தாவும் மீண்டும் முதலிடம் பிடிப்பு ...‘ஆர்மேக்ஸ் மீடியா’ என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் மிகவும் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வருடத்துக்கான பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. இதையடுத்து இதில் நடிகை சமந்தா முதலிடத்தில் இருக்கிறார். கடந்த வருடமும் அவர்தான் முதலிடத்தில் இருந்தார்.
ஆலியா பட், தீபிகா படுகோன், நயன்தாரா, காஜல் அகர்வால், த்ரிஷா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும் நடிகர்கள் பட்டியலில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் விஜய் முதலிடத்தில் உள்ளார். ஷாருக்கான், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், அஜித்குமார், சல்மான் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.