Advertisement

'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர்

By: vaithegi Sun, 11 Dec 2022 11:42:46 AM

'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர்

இந்தியில் ரீமேக் .... சிறிய பட்ஜெட்டில் தயாராகி கடந்த மாதம் திரைக்கு வந்த 'லவ் டுடே' படம் பல மடங்கு வசூல் குவித்து திரையுலகினரை பெரும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. சுமார் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தியேட்டர்கள் மூலம் மட்டுமே ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஓ.டி.டி. உரிமை மூலமும் பெரிய தொகை வந்துள்ளது. தெலுங்கில் வெளியிட்டும் அதிக லாபம் பார்த்துள்ளனர். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்து இருந்தார். நாயகியாக இவானா நடித்து இருந்தார்.

love today,remake ,லவ் டுடே,ரீமேக்

அடுத்து 'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர். இதையடுத்து இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவான் பெயர் அடிபடுகிறது. இந்தி பதிப்பையும் பிரதீப் ரங்கநாதனே இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதனை அடுத்து ஏற்கனவே தமிழில் வெற்றி பெற்ற பல படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி உள்ளன. சூர்யா நடித்த சூரரை போற்று படமும் இந்தியில் ரீமேக் ஆகி கொண்டு வருகிறது.

Tags :