Advertisement

இது எனக்கு ஸ்பெஷலான திரைப்படம் ..ஸ்ருதி ஹாசன் தெரிவிப்பு

By: vaithegi Tue, 03 Oct 2023 10:49:05 AM

இது எனக்கு ஸ்பெஷலான திரைப்படம்  ..ஸ்ருதி ஹாசன் தெரிவிப்பு

ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி ...நடிகை ஸ்ருதிஹாசன் இப்போது ‘சலார்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இதன் இடையே அவர் ‘தி ஐ’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். இதில், ஸ்ருதியுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ படத்தில் நடித்த மார்க் ரோலே நடித்து உள்ளார். கடந்த 1980-ம் ஆண்டில் நடப்பது போல இதன் கதை அமைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஒரு பெண், கணவன் இறப்புக்குப் பின் அவர் சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்குச் செல்கிறார். அப்போது ஏற்படும் உளவியல் சார்ந்த திருப்பங்களும் சம்பவங்களும்தான் கதை. இதில் நடிகைகள் அன்னா சவ்வா, லிண்டோ மார்லோ உட்பட பலர் நடித்து உள்ளனர்.

shruti haasan,movie,joy ,ஸ்ருதி ஹாசன் ,திரைப்படம்  ,மகிழ்ச்சி

இந்த நிலையில், இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள ஸ்ருதி ஹாசன், இது எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். டாப்னி ஸமான் (Daphne Schmon) இயக்கிய இப்படம் கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லண்டன் சுயாதீன திரைப்பட விழாவில் சிறந்தப் படத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது


Tags :
|