Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மாஸ்டர் திரைப்படத்தில் எனது கேரக்டர் இதுதான் - மனம் திறந்த விஜய் சேதுபதி

மாஸ்டர் திரைப்படத்தில் எனது கேரக்டர் இதுதான் - மனம் திறந்த விஜய் சேதுபதி

By: Monisha Thu, 02 July 2020 11:00:54 AM

மாஸ்டர் திரைப்படத்தில் எனது கேரக்டர் இதுதான் - மனம் திறந்த விஜய் சேதுபதி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திரை அரங்குகள் திறக்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பது தான் இந்த படத்தின் சிறப்பம்சம். விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதியின் வில்லத்தனமான நடிப்பை திரையில் பார்க்க விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'மாஸ்டர்' திரைப்படத்தில் தனது வில்லன் கேரக்டர் குறித்து அவர் மனம் திறந்து ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

master,film,character,vijay sethupathi,actor vijay ,மாஸ்டர்,திரைப்படம்,வில்லன் கேரக்டர்,விஜய் சேதுபதி,நடிகர் விஜய்

'மாஸ்டர்' திரைப்படத்தில் முழுக்க முழுக்க எனது கேரக்டர் வில்லன் தான். படத்தில் துளிகூட நல்லவன் இல்லை. இது போன்ற கேரக்டர்களில் நடிக்க நான் மிகவும் ஆவலுடன் இருந்தேன். அந்த வாய்ப்பு இப்போதுதான் எனக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியின் இந்த கருத்து, ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் விஜய் சேதுபதியின் வில்லன் கேரக்டர் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|