Advertisement

இந்தியில் இதுதான் முதல்முறை... ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்த பதான்

By: Nagaraj Fri, 17 Feb 2023 10:32:59 PM

இந்தியில் இதுதான் முதல்முறை... ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்த பதான்

மும்பை: இந்தியில் மட்டுமே ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது பதான் படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பாலிவுட் திரையுலகை பதான் காப்பாற்றியுள்ளது என்று அனைவரும் தெரிவிக்கின்றனர்.

ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி வெளிவந்த திரைப்படம் பதான். இப்படம் எதிர்பார்த்ததை விட திரையரங்கில் சக்கபோடு போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

vasool athadha,pathan,live hindi movie,first,shah rukh ,வசூல் சாதனை, பதான், நேரடி இந்தி படம், முதல், ஷாரூக்

அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த பாலிவுட் திரையுலகையே பதான் திரைப்படம் தான் தற்போது தூக்கி நிறுத்தியுள்ளது என்கின்றனர் பாலிவுட் திரை வட்டாரத்தினர். இந்நிலையில், இப்படம் இந்தியில் மட்டுமே ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி முதன் முதலில் ரூ. 500 கோடி வசூல் செய்த நேரடி இந்தி திரைப்படம் என்ற வசூல் சாதனையையும் பதான் படம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|