Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது வைல்கார்ட் போட்டியாளர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது வைல்கார்ட் போட்டியாளர் இவர்தான்!

By: Monisha Wed, 04 Nov 2020 2:28:23 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது வைல்கார்ட் போட்டியாளர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதலில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் ரேகா, வேல்முருகன் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட்கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளனர். இதனை அடுத்து தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 பேர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மூன்றாவது வைல்கார்ட் போட்டியாளராக விஜய் பட நடிகை ஒருவர் செல்ல இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

bigg boss show,wildcard,indraja,grouping,favoritism ,பிக்பாஸ் நிகழ்ச்சி,வைல்கார்ட்,இந்திரஜா,குருப்பிஸம், ஃபேவரிஸம்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'பிகில்' படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்த இந்திரஜா என்பவர் தான் மூன்றாவது வைல்கார்ட் போட்டியாளர் என்று கூறப்படுகிறது. இவர் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள்.

ஏற்கனவே சனம்ஷெட்டி - பாலாஜி, ஆரி-அர்ச்சனா, என பல்வேறு பிரச்சினைகளும், இதுவரை இல்லாத குருப்பிஸம், ஃபேவரிஸம் போன்ற தந்திரங்களை பயன்படுத்தி வரும் போட்டியாளர்களும் உள்ள இந்த சீசனில் இந்திரஜா இந்த வீட்டில் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :