- வீடு›
- பொழுதுபோக்கு›
- தளபதி 68 படத்தின் தலைப்பு இதுதானாங்க
தளபதி 68 படத்தின் தலைப்பு இதுதானாங்க
By: vaithegi Mon, 05 June 2023 11:46:45 AM
நடிகர் விஜய் தற்போது தனது 67-வது படமான லியோ திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
அந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை, அதற்குள் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், படத்தின் தலைப்பு என்னவென்பதற்கான தகவல் இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.
இதையடுத்து அந்த வகையில், தற்போது தளபதி 68 படத்திற்கான தலைப்பு குறித்த ஒரு தகவல் பரவி கொண்டு வருகிறது. அடா ஆமாங்க ... அது என்னவென்றால், இந்த தளபதி 68 படத்திற்கு தலைப்பு CSK-என வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய்யும், வெங்கட் பிரபுவும் தீவிர சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எனவே, இந்த CSK எனும் தலைப்பை அவர்கள் படத்திற்கு வைக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இத்தகவல் உண்மையானதாக இருந்தால் வருகிற ஜூன் 22-ஆம் தேதி தளபதி 68 பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.