- வீடு›
- பொழுதுபோக்கு›
- டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து நடித்துள்ள ஆர்வன் படத்தின் போஸ்டர் வெளியானது
டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து நடித்துள்ள ஆர்வன் படத்தின் போஸ்டர் வெளியானது
By: Nagaraj Mon, 16 Oct 2023 07:16:41 AM
சென்னை: டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து திருநங்கையாக நடித்துள்ள படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
யூடியூப் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் ஜி.பி முத்து. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம் ஆனது.
ஜி.பி முத்து இறுதி போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் சில காரணத்தால் திடீரென தானாக நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டார்.
தற்போது ஜி.பி முத்து 'ஆர்வன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :
poster |
gp muthu |
arvan |
acting |