Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரசிகர்களிடம் இருந்து கீர்த்தி சுரேசை மீட்ட திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர்கள்

ரசிகர்களிடம் இருந்து கீர்த்தி சுரேசை மீட்ட திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர்கள்

By: Nagaraj Sun, 28 May 2023 10:06:36 PM

ரசிகர்களிடம் இருந்து கீர்த்தி சுரேசை மீட்ட திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர்கள்

ஆந்திரா: திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் முடித்து பிரஹாரத்தில் இருந்து வெளியே வந்த கீர்த்தி சுரேசை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். .உடன் தேவஸ்தான பாதுகாவலர்கள் கீர்த்தி சுரேஷை மீட்டு பேட்டரி காருடன் அவரது இருப்பிடத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பைரவா, மகாநதி, தானா சேர்ந்த கூட்டம், ரெமோ, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நானியுடன் நடித்த தசரா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

actress,fans,tirupathi , ஊழியர்கள், கீர்த்தி சுரேஷ், நடிகை

இப்படத்தின் 2வது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்த பிறகு, நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ரங்க நாயக்கர் மண்டபத்தில் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின், பிரஹாரத்தில் இருந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

.உடனடியாக தேவஸ்தான பாதுகாவலர்கள் கீர்த்தி சுரேஷை மீட்டு பேட்டரி காருடன் அவரது இருப்பிடத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

Tags :
|