- வீடு›
- பொழுதுபோக்கு›
- சூரி நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியீடு
சூரி நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியீடு
By: vaithegi Fri, 10 Mar 2023 11:37:12 AM
நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி படங்களை தயாரித்து கொண்டும் வருகிறார். இதுவரை “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” சார்பில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக புது படம் ஒன்றை தயாரிக்கிறார்.
இதையடுத்து அதன்படி, சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள 6-வது படத்திற்கான அறிவிப்பு இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே அதன்படி, சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 6-வது படத்தை வினோத்ராஜ் பி.எஸ் என்பவர் இயக்குகிறார். இது தான் அவருக்கு முதல் திரைப்படம். இத்திரைப்படத்தின் மூலம் வினோத்ராஜ் பி.எஸ் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். மேலும், இத்திரைப்படத்தில் ஹீரோவாக சூரி நடிக்கிறார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் என்பவர் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு” கொட்டுக்காளி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.