Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இன்று நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள்; பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி

இன்று நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள்; பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி

By: Nagaraj Sat, 12 Dec 2020 09:48:17 AM

இன்று நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள்; பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி

பிரதமர் வாழ்த்துச் செய்தி... நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர். அவருக்கு வாழ்த்து கூற நேற்று இரவு முதலே ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர்.

போயஸ்கார்டனில் நள்ளிரவில் ரசிகர்கள் சிலர் கேக்வெட்டி பிறந்தநாளையும் கொண்டாடியுள்ளனர். இது தவிர சமூக வலைதளங்களிலும் ரஜினிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என்று அறிவிப்பு வெளியானபின் ரஜினி மீது கூடுதல் கவனமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

actor rajinikanth,greetings,prime minister modi,deputy chief minister ,நடிகர் ரஜினிகாந்த், வாழ்த்து, பிரதமர் மோடி, துணை முதல்வர்

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் 'அன்புள்ள ரஜினிகாந்த், உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். நீண்டகாலத்துக்கு ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெற்று வாழ வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் செய்தியில் 'தனது அயராது உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்புசகோதரர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Tags :