Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாடும் நிலாவாக வாழ்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பி., யின் பிறந்த நாள் இன்று

பாடும் நிலாவாக வாழ்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பி., யின் பிறந்த நாள் இன்று

By: Nagaraj Sun, 04 June 2023 12:34:00 PM

பாடும் நிலாவாக வாழ்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பி., யின் பிறந்த நாள் இன்று

சென்னை: மறைந்த பாடகர், நடிகர் எஸ்.பி.பி., ஜூன் 4 பிறந்தநாளை முன்பு பெரிய கொண்டாட்டமாகக் கொண்டாடுவார். கடந்த பத்து வருடங்களிலிருந்து இறக்கும்வரை ஏனோ தன் பிறந்தநாளை அவர் கொண்டாடவே இல்லை.

தீவிர ஆன்மிகவாதி. திருப்பதி, கொல்லூர் மூகாம்பிகை ஸ்தலங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் காரிலேயே போய் வந்துவிடுவார். கடவுள் தரிசனத்திற்கு நேரம் காலம் பார்க்கக்கூடாது என்பார்.

45,000 பாடல்கள் பாடியிருக்கிறார். இதில் அதிகாரபூர்வமாகக் கணக்கில் வராத பாடல்கள், கடவுள் பாடல்கள் தனி. சொந்த ஊர், மாநிலம் ஆந்திரா என்பார்கள். ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கோனேட்டம்பேட்டாதான் அவரது சொந்த ஊர்.

simple man,singer sbb,birthday,not celebrating,kids ,எளிய மனிதர், பாடகர் எஸ்.பி.பி., பிறந்தநாள், கொண்டாடவில்லை, குழந்தைகள்

விரும்பினால் மட்டும் திரைப்படங்களில் நடிப்பார். அவருக்குப் பிடித்த இயக்குநர், சக நடிகர் என்று பார்த்துத்தான் நடிப்பார். உடல் பருமன் குறைப்புச் சிகிச்சை செய்த பிறகு கணிசமாக அவருக்கு எடை குறைந்தது. ஆனால் அதனாலேயே சில உடல்நல பிரச்னைகள் புதிதாக எழுந்தன.

ரஜினியும் கமலும் மட்டுமே மிக நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி சந்தித்து நீண்ட நேரம் பேசுவார்கள். கமல் எஸ்.பி.பி-யை அவரின் அண்ணா என்றே அழைத்து வந்தார். எஸ்.பி.பி முதன் முதலில் ஆடிஷனில் பாடிய பாடல் 'நிலவே என்னிடம் நெருங்காதே'. ஜெமினி கணேசன் நடித்த 'ராமு' (1966) படத்தின் இந்தப் பாடலை பின்னர் P.B.ஶ்ரீனிவாஸ் பாடினார்.

வெளியிடங்களில் குழந்தைகள் பாடச் சொன்னால் பாடுவார். மாற்றுத்திறனாளிகள் கேட்டுக் கொண்டாலும் நாலு வரி பாடி அவர்களை மகிழ்விப்பார். எல்லோருடனும் அன்பும், நட்பும் பாராட்டும் எளிய மனிதராய் வாழ்ந்து மறைந்தார்.

Tags :