Advertisement

இன்றைய பிக்பாஸ் வீட்டின் கலக்கல் டாஸ்க்... உருமாறிய போட்டியாளர்கள்

By: Nagaraj Tue, 20 Oct 2020 3:37:32 PM

இன்றைய பிக்பாஸ் வீட்டின் கலக்கல் டாஸ்க்... உருமாறிய போட்டியாளர்கள்

அரக்கனாக சுரேஷ், இம்சை அரசனாக ரியோ உருமாறி உள்ள ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, 'சூப்பர் சிங்கர்' ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் 'விஜய் டிவி' மற்றும் 'ஜீ தமிழ்' மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். நேற்று முன் தினம் பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

monster,monster task,rio,suresh,getup ,அரக்கர், அரக்கி டாஸ்க், ரியோ, சுரேஷ், கெட்டப்

இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் புதிய டாஸ்கில் "அரக்கர்களும் அரக்கிகளும் உங்களை என்னதான் தொந்தரவு செஞ்சாலும், அதுக்கு நீங்க எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் சிலையாகவே இருக்க வேண்டும்" என்று ரியோ ராஜ் சொல்கிறார். பின், அனைத்து போட்டியாளர்களும் அவரவருக்கென கொடுக்கப்பட்ட கெட்டப்பில் ரெடியாகுகின்றனர்.

இதில் ரியோ ராஜுக்கு 'இம்சை அரசன் புலிகேசி' போன்ற ஒரு கெட்டப்பும், சுரேஷ் சக்கரவர்த்திக்கு அரக்கர் கெட்டப்பும் தரப்படுகிறது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் செம வைரலாக பரவி வருகிறது.

Tags :
|
|