Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

By: vaithegi Mon, 03 July 2023 11:46:26 AM

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

வெளியானது ‘மாவீரன்’ டிரைலர் ...... ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதிஷங்கர் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, மிஸ்கின், மோனிஷா, சரிதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். முதலில் நேற்று இரவு 7 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழிநுட்பக்கோளாறு காரணமாக 8 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

trailer,sivakarthikeyan ,ட்ரைலர் ,சிவகார்த்திகேயன்

இதன்படி ட்ரைலர் வெளியாகி உள்ளது. ட்ரெய்லரை பார்க்கையில் இந்த திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெய்லரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் காண்போரை மிகவும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்ற கூறலாம்.

மேலும் அத்துடன் டிரைலரில் வரும் பின்னணி இசையும் காண்போரை வெகுவாகக் கவரும் வகையில் ட்ரைலர் உருவாக்கப்பட்ட உ ள்ளது. இதனால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளதால், வருகிற ஜூலை 14 -ம் தேதியை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

Tags :