Advertisement

செங்களம் வெப்சீரிஸ்-ன் ட்ரைலர் வெளியீட்டு விழா

By: Nagaraj Sun, 19 Mar 2023 9:36:09 PM

செங்களம் வெப்சீரிஸ்-ன் ட்ரைலர் வெளியீட்டு விழா

சென்னை: செங்களம் வெப்சீரிஸ்-ன் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Zee5 OTT இன் அடுத்த படைப்பு “செங்களம்” என்ற வெப் சீரிஸ் ஆகும். அபினேஷ் இளங்கோவன் தயாரித்து எஸ்.ஆர். பிரபாகரன், கலையரசன் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் தென் தமிழ்நாட்டின் பின்னணியில் உருவாகும் அரசியல் திரில்லர் கதையம்சம் ஆகும்.

தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபாகரன், “எனது முதல் படம் போன்ற உணர்வுடன் முதல் வெப் தொடருக்காக உங்கள் முன் நிற்கிறேன். இந்தத் தொடர் ஒரு அரசியல் திரில்லர். உங்களுக்கு பல ஆச்சரியங்கள் இருக்கும். எந்த வேடத்தில் நடித்தாலும் அசத்தும் கலையரசன் இதிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

actor,web series,zee5, ,செங்களம், ஜீ5, வெப் சீரிஸ், இசை, அற்புதம்

வாணி போஜன் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஜி மேம், ஷாலி, கண்ணன் என எல்லாருமே கேரக்டர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவருமே எனது மிகப்பெரிய பலம். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எதையும் எதிர்பார்க்காமல் உழைத்திருக்கிறார்கள்” என்றார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், “இந்தப் பணியில் பணியாற்றிய பலர் எனது நெருங்கிய நண்பர்கள். எல்லோரும் ஒரு நல்ல வேலையைச் செய்திருக்கிறார்கள். இந்த ட்ரெய்லரைப் பார்த்ததும், இப்படி ஒரு கதையைச் செய்திருக்கலாமே என்று பொறாமையாக இருந்தது. ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனின் படைப்பைக் கண்டு இவ்வளவு பொறாமைப்பட்டால் அது நல்ல படைப்பு. அந்த வகையில் எஸ்.ஆர். பிரபாகரன் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார்.

இந்த டிரெய்லரில் முதலில் என்னைத் தாக்கியது இசை. சிறந்த இசையுடன் காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்” என்றார். ஜீ5 அப்பில் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது.

Tags :
|
|