Advertisement

மலையாளப்படத்தில் இணைந்து நடிக்க உள்ள த்ரிஷா, நயன்தாரா!!!

By: Nagaraj Fri, 07 Oct 2022 10:00:05 PM

மலையாளப்படத்தில் இணைந்து நடிக்க உள்ள த்ரிஷா, நயன்தாரா!!!

சென்னை : நடிகை த்ரிஷா நடிக்கும் படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் த்ரிஷா. இப்படத்தில் அவரது குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது வரை அதே அழகாகவும் இளமையாகவும் இருக்கும் த்ரிஷா ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்தார்.

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், த்ரிஷாவும் நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் நிலையில் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி ஒரு வாய்ப்பு சில முறை கிடைத்தாலும், சில காரணங்களால் தடைப்பட்டது.

vigneshsivan,ram film,nashtam,nayanthara,fans ,விக்னேஷ்சிவன், ராம் படம், நஷ்டம், நயன்தாரா, ரசிகர்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்ல ரெண்டு காதல் படத்தில் சமந்தா நடித்த வேடத்தில் த்ரிஷா நடிப்பதாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இந்தப் படத்தில் நடிக்க த்ரிஷா மறுத்து விட்டார்.

தற்போது த்ரிஷா மோகன்லால் நடிக்கும் ராம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இப்படம் மலையாளத்தில் உருவாகி வருகிறது. ரெட் கார்பெட் மீது சுரேஷின் நஷ்டத்தை ஈடுகட்ட ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் இருவரும் இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.ராம் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

தற்போது இப்படத்தில் நயன்தாராவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் முடிவில் தொடங்கி இரண்டாம் பாகம் வரை அவரது கதாபாத்திரம் தொடரும் என்று கூறப்படுகிறது.

Tags :