Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட புதிய பான் இந்தியன் திரைப்படத்தில் த்ரிஷா

மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட புதிய பான் இந்தியன் திரைப்படத்தில் த்ரிஷா

By: vaithegi Wed, 22 Nov 2023 4:24:39 PM

மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட புதிய பான் இந்தியன் திரைப்படத்தில் த்ரிஷா


தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கூறிய கருத்துக்களால் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து உள்ளார்.

இதையடுத்து நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி கொண்டு வருகிறது. இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்கில் பெரும் வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில், த்ரிஷா மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட புதிய பான் இந்தியன் திரைப்படத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாம். இது ஒரு சரித்திர படமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்திற்காக நடிகை த்ரிஷா ரூ.12 கோடி சம்பளம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

trisha,budget,salary ,த்ரிஷா ,பட்ஜெட் ,சம்பளம்

இந்த படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் திரிவிக்ரம் இயக்க உள்ளதாகவும், தெலுங்கில் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க தான் ஒப்பந்தமாகி உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மன்சூர் அலிகான் சர்ச்சைக்கு மத்தியில் தெலுங்கில் கிடைத்த இந்த மாபெரும் வாய்ப்பை த்ரிஷாவின் ரசிகர்கள் கொண்டாடி கொண்டு வருகின்றனர். மேலும் இதுமட்டுமின்றி நடிகை த்ரிஷாவுக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகின்றன.

Tags :
|
|