Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜய்யுடன் நடிக்கிறார் த்ரிஷா... தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யுடன் நடிக்கிறார் த்ரிஷா... தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By: Nagaraj Thu, 02 Feb 2023 10:01:39 PM

விஜய்யுடன் நடிக்கிறார் த்ரிஷா... தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: 'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன்படி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர்.

announcement,vijay,long break,trisha,patapooja,update ,அறிவிப்பு, விஜய், நீண்ட இடைவெளி, திரிஷா, படபூஜை, அப்டேட்

மேலும் அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்துள்ளது.

இந்நிலையில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ள பிரபலங்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி மேலும் ஒரு முக்கிய அறிவிப்பாக நடிகை திரிஷா தளபதி 67 படத்தில் இனைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படபூஜை போட்டோக்கள், படத்தின் அறிவிப்பு டீசர் போன்றவற்றின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|