- வீடு›
- பொழுதுபோக்கு›
- இரண்டு வீடா? பிக்பாஸ் குறித்து கமல் கூறிய தகவல் செம வைரல்
இரண்டு வீடா? பிக்பாஸ் குறித்து கமல் கூறிய தகவல் செம வைரல்
By: Nagaraj Sat, 26 Aug 2023 7:23:29 PM
சென்னை: பிக்பாஸ் இம்முறை இரண்டு வீடு என்று கமல்ஹாசன் கூறிய தகவல் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 8ம் தேதி பிரம்மாண்டமாக தொடக்க விழாவுடன் ஆரம்பிக்கவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆறு சீசன்களை தொடர்ந்து 7வது சீசனிலும் கமல்ஹாசனே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
தற்போது, பிக் பாஸ் 7வது சீசனுக்கான முன்னோட்டக் காட்சி ஒன்று வெளியானது. அதில், கமல் இரட்டை வேடங்களில் வருகிறார். ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வது போல் அமைந்துள்ளது.
அந்தக் காட்சியில் கமல்ஹாசன், இம்முறை பிக் பாஸ் வீடு இரண்டாக மாறியிருக்கிறது என்று கூறியுள்ள தகவல், ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ரேகா நாயர், நடிகர் பிரித்விராஜ்(பப்லு), தொகுப்பாளினி ஜாக்லின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
யாரெல்லாம் பங்கேற்கவுள்ளார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் பிக் பாஸ் தொடக்க நிகழ்ச்சியில் மட்டுமே தெரியவரும்.