Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சூரரை போற்று திரைப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் அடுத்த வாரம் வெளியீடு!

சூரரை போற்று திரைப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் அடுத்த வாரம் வெளியீடு!

By: Monisha Fri, 02 Oct 2020 5:33:59 PM

சூரரை போற்று திரைப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் அடுத்த வாரம் வெளியீடு!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'சூரரை போற்று’ திரைப்படம் இம்மாதம் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 15ஆம் தேதியே தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் திரையரங்குகளில் திறக்கப்படும் என்று கூறப்பட்டாலும் 'சூரரை போற்று' படம் ஓடிடியில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஓடிடியில் படத்தின் இரண்டு முக்கிய அப்டேட்டுகள் வெளிவந்துள்ளன. ஓடிடியில் படத்தின் தெலுங்கு பதிப்பான 'Aakaasam NeeHaddhuRa' என்ற படத்திற்கு பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் சூர்யாவுக்காக பின்னணி குரல் கொடுத்துள்ளார். தெலுங்கில் சூர்யாவின் கேரக்டருக்கு இவரது குரல் மிகப் பொருத்தமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

surya,sudha kongara,gv prakash,trailer ,சூரரை போற்று,சூர்யா,சுதா கொங்கரா,ஜிவி பிரகாஷ்,ட்ரெய்லர்

மேலும் இன்னொரு அப்டேட் என்னவெனில் சூர்யாவின் 'சூரரை போற்று' திரைப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த படம் இம்மாதம் 30 ஆம் தேதி வெளியாவதை அடுத்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்க இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக இந்த ட்ரைலர் வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீஸர், மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டு நிமிட ட்ரைலரும் சூர்யா ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சூரரை போற்று திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பாடல்களும் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|