Advertisement

வாரிசு படத்தின் தமிழக விநியோகத்தையும் கைப்பற்றினாரா உதயநிதி

By: Nagaraj Sun, 30 Oct 2022 7:07:21 PM

வாரிசு படத்தின் தமிழக விநியோகத்தையும் கைப்பற்றினாரா உதயநிதி

சென்னை: வாரிசு படத்தின் தமிழக விநியோகத்தையும் மறைமுகமாக உதயநிதி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

udayanidhi has also taken over the tamil nadu distribution of varisu ,விநியோகம், பொன்னியின் செல்வன், தகவல், திரைப்படம், வாரிசு

மேலும் நடிகர் அஜித்தின் துணிவு திரையரங்க உரிமத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாக, அப்படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோகத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால் அதனை 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் பெயரில் பின்னால் இருந்து செய்வதாக சொல்லப்படுகிறது. மேலும் இதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம், பின்னால் பெயரை குறிப்பிடாமல் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :