Advertisement

12 ஆண்டுகளுக்கு பின் சிம்பு படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்

By: Nagaraj Sun, 10 July 2022 9:37:38 PM

12 ஆண்டுகளுக்கு பின் சிம்பு படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் சிலம்பரசன் படத்தை வாங்கி வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

தமிழின் பெரும்பாலான படங்களை உதயநிதியின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ்தான் வெளியிடுகிறது. இதுகுறித்து விமர்சனங்கள் தொடர்ந்து வந்தபோதும்... ஓடும் என்று தெரிந்த படங்களை மட்டுமே அவர்கள் வாங்கி வெளியிட்டு வருகிறார்கள்.

விக்ரம் படத்தை தொடர்ந்து 'கோப்ரா, சர்தார், கேப்டன், வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களை வெளியிட உள்ளார்கள் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தார். சிலம்பரசன் நாயகனாக நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம்தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் முதன் முதலில் விநியோக உரிமை வாங்கி வெளியிட்ட படம்.

red giant,burned down forest,captain,arya,udayanidhi ,ரெட் ஜெயன்ட், வெந்து தணிந்தது காடு, கேப்டன், ஆர்யா, உதயநிதி

அதற்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து சிலம்பரசன் நடிக்கும் ஒரு படத்தை மீண்டும் வாங்கி வெளியிடுகிறார் உதயநிதி. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் சிலம்பரசன். “12 வருடங்கள் கழித்து மீண்டும் உங்களுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சி அண்ணா,” என்று தன் வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 8ம் தேதி ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' படத்தை வெளியிட்ட ஒரு வாரத்தில் செப்டம்பர் 15ம் தேதி 'வெந்து தணிந்தது காடு' படத்தையும் வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட்.

Tags :
|