Advertisement

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் குறித்து வெளியான அப்டேட்

By: Nagaraj Tue, 26 Sept 2023 6:36:09 PM

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் குறித்து வெளியான அப்டேட்

சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். சரித்திர பாணியில் உருவாகி வரும் இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

captain miller,gv prakash,music director,update, ,அப்டேட், இசையமைப்பாளர், கேப்டன் மில்லர், ஜி.வி.பிரகாஷ்

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. படத்தின் அடுத்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில், “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்.. நீ படையா வந்தா சவ மழ குவியும் ” என்று பதிவிட்டு பாடல் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags :
|