Advertisement

வாரிசு படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல்

By: vaithegi Sat, 14 Jan 2023 2:59:29 PM

வாரிசு படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல்

சென்னை : 100 கோடி வசூல் ... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' போன்ற திரைப்படங்கள் நேற்று வெளியானது.இதையடுத்து ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் பெரும் உற்சாகம் அடைந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள், சினிமா வெளியீட்டிற்காக சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை என மொத்தம் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் 1,168 தியேட்டர்கள் உள்ளன.இதில் பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு படங்களுக்கு சரிசமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று தமிழ்நாட்டின் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்திருந்தது.

inheritance,world,collection ,வாரிசு ,உலகம் ,வசூல்

இதனை அடுத்து இந்த 2 படத்திற்கும் சுமார் 500 திரையரங்கள் வரை ஒதுக்கப்பட்டு இருந்தது. வாரிசு படம் வெற்றி பெற போகிறதா அல்லது துணிவு படம் வெற்றிபெற போகிறதா என்று சமூக வலைதளங்களில் ஆங்காங்கே பல சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்தது. விஜய்யின் வாரிசு படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

உலகளாவிய வசூல் 3-வது நாளுக்குப் பிறகு சுமார் ரூ.103 கோடியாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் வாரிசு ரூ.49 கோடிக்கு மேல் வசூல் செய்து 50 கோடியை எட்ட உள்ளது.மொத்த உள்நாட்டு வசூல் மொத்தம் ரூ.78 கோடியை நெருங்குகிறது.இந்த படம் வெளிநாட்டு சந்தையில் கிட்டத்தட்ட 25 கோடிகளை சம்பாதித்து 100 கோடி கிளப்பில் நுழைந்தது.

Tags :
|