Advertisement

வாரிசு படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல்

By: vaithegi Tue, 07 Feb 2023 4:20:17 PM

வாரிசு படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல்

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்பில் உருவான இந்த படம் கடந்த 11-ம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதனைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று கொண்டு வருகிறது.

collection,succession ,வசூல்,வாரிசு

'வாரிசு' படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் வாரிசு படத்தின் புதிய வசூல் பாரிய அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து அதில், வாரிசு படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி கொண்டு வருகின்றனர்.

Tags :