Advertisement

'வாத்தி' .. ஓரிரு நாட்களில் ரூ.100 கோடி அடித்துவிடும்

By: vaithegi Sat, 25 Feb 2023 3:15:27 PM

'வாத்தி'   ..  ஓரிரு நாட்களில் ரூ.100 கோடி அடித்துவிடும்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து கொண்டு வருகிறது.தமிழில் “வாத்தி” என்ற பெயரிலும், தெலுங்கில் “சார்” என்ற பெயரிலும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

கல்வியை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் பலருக்கும் படம் பிடித்துள்ளது. எனவே படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் திரையங்கிற்கு செல்கிறார்கள்.தமிழை விட தெலுங்கில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

vathi,dhanush ,வாத்தி,தனுஷ்

இந்நிலையில், படம் வெளியான 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இப்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், தனுஷின் கடந்த கால படமான ரூ.100 கோடி வசூல் செய்த படங்களுடன் வாத்தி திரைப்படம் இணையும் நேரம் வந்துவிட்டது. அதன்படி, இன்று ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.100 கோடி அடித்துவிடும் என்பதில் எந்த வித சந்தேகமே இல்லை.

Tags :
|