Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அரசியல்வாதி கெட்டப்பில் வடிவேலு... மாமன்னன் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிப்பு

அரசியல்வாதி கெட்டப்பில் வடிவேலு... மாமன்னன் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிப்பு

By: Nagaraj Wed, 10 May 2023 3:04:53 PM

அரசியல்வாதி கெட்டப்பில் வடிவேலு... மாமன்னன் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிப்பு

சென்னை: எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது... மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் போஸ்டர் புகைப்படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

photography,politician,facebook,director mari selvaraj,expectation ,புகைப்படம், அரசியல்வாதி, பேஸ்புக், இயக்குனர் மாரி செல்வராஜ், எதிர்பார்ப்பு

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் வடிவேலு மற்றும் உதயநிதி ஆகியோரின் புகைப்படங்களை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் அரசியல்வாதி தோற்றத்திலிருக்கும் வடிவேலுவின் புகைப்படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Tags :