Advertisement

மீண்டும் தொடங்கும் வலிமை படப்பிடிப்பு!

By: Monisha Mon, 07 Dec 2020 2:28:33 PM

மீண்டும் தொடங்கும் வலிமை படப்பிடிப்பு!

நடிகர் அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடிக்கிறார். இது அஜித்குமாருக்கு 59-வது படம். இந்த படத்தில் ஜோடியாக கியூமா குரோஷி வருகிறார். இவர் ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து பிரபலமானவர். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லன் வேடம் ஏற்றுள்ளார். வினோத் இயக்குகிறார். இது அஜித்குமாருக்கு 59-வது படம்.

கொரோனா பரவலுக்கு முன்பே முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தனர். ஊரடங்கை தளர்த்தியதும் கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் 2-வது கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அஜித்குமார் கொரோனாவுக்கு அஞ்சாமல் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார்.

valimai,shooting,ajithkumar,hyderabad,crew ,வலிமை,படப்பிடிப்பு,அஜித்குமார்,ஐதராபாத்,படக்குழுவினர்

மோட்டார் சைக்கிளில் சென்று வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியில் அவர் நடித்தபோது விபத்து ஏற்பட்டு காலில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அஜித் சென்னை திரும்பினார்.

தற்போது மீண்டும் ஐதராபாத்திலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் தயாராகி உள்ளனர். இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்படுகிறது. விரைவில் அஜித்குமார் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்கிறார். கோடை விடுமுறையில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

Tags :