Advertisement

வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

By: Monisha Mon, 29 June 2020 11:39:54 AM

வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், ரிலீஸ்க்கு தயாராக உள்ள படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இதனால், ரிலீஸ்க்கு தயாராகி இருக்கும் படங்கள் சிலவற்றை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றன. இதில் தமிழ்த் திரையுலகிலிருந்து முதலாவதாக ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' வெளியானது.

vani bhojan,lockup film,ott,cinema ,வாணி போஜன்,லாக்கப் படம்,ஓடிடி,சினிமா

தற்போது ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியுள்ள 'டேனி' மற்றும் 'காக்டெய்ல்' ஆகிய படங்கள் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக 'லாக்கப்' படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'லாக்கப்' படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஜீ5 ஓடிடி தளமே கைப்பற்றியுள்ளது. எப்போது வெளியீடு என்ற தேதி இன்னும் உறுதியாகவில்லை. எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் போன்று உருவாகியுள்ளது.

Tags :
|