Advertisement

'வாரிசு படம் தெலுங்கு மொழியில் வெளியாகும் தேதி வெளியீடு

By: vaithegi Mon, 09 Jan 2023 3:43:16 PM

'வாரிசு  படம் தெலுங்கு மொழியில் வெளியாகும் தேதி வெளியீடு

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும்,இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. அந்த டிரைலரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

telugu,warisu,movie ,தெலுங்கு ,வாரிசு  ,படம்

இதையடுத்து 'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு மொழி ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்து உள்ளார்.

எனவே அதன்படி தெலுங்கில் வரும் 11-ம் தேதி வாரிசு திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மாற்றம் செய்யப்பட்டு வரும் 14-ம் தேதி வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|