Advertisement

'வாரிசு' ... டிரைலர் இன்று வெளியீடு

By: vaithegi Wed, 04 Jan 2023 10:59:08 AM

'வாரிசு' ...  டிரைலர் இன்று வெளியீடு

விஜய்யின் வாரிசு படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக தகவல் . தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி நிறைய ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர். இவருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்க இப்போது வாரிசு என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்திற்கு ராஷ்மிகா நாயகியாக நடிக்க பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்துள்ளார்.

'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் மேலும், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

trailer,successor ,டிரைலர் ,வாரிசு

இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

இந்நிலையில், வாரிசு படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. மாலை 5 மணிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியீடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும், ஆர்வத்திலும் உள்ளனர்.

Tags :