Advertisement

வருது... வருது... துணிவு படத்தில் இருந்து முதல் பாடல் வருது!!!

By: Nagaraj Tue, 06 Dec 2022 5:43:30 PM

வருது... வருது... துணிவு படத்தில் இருந்து முதல் பாடல் வருது!!!

சென்னை: துணிவு படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இதில் அஜித்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

film team,releasing,thunivu ,அஜித், துணிவு, படக்குழு, முதல் பாடல்

மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான ‘சில்லா சிலா’ பாடல் வருகிற வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

Tags :