Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வீர சிம்ஹா ரெட்டி படத்தின் மாஸ் மொகுடு பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியீடு குறித்து அறிவிப்பு

வீர சிம்ஹா ரெட்டி படத்தின் மாஸ் மொகுடு பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியீடு குறித்து அறிவிப்பு

By: Nagaraj Mon, 02 Jan 2023 11:07:07 AM

வீர சிம்ஹா ரெட்டி படத்தின் மாஸ் மொகுடு பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியீடு குறித்து அறிவிப்பு

ஐதராபாத்: நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி படத்தில் இடம்பெற்றுள்ள மாஸ் மொகுடு பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் நடித்து வருகிறார் நந்தமுரி பாலகிருஷ்ணா. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

veera simha reddy,balakrishna,release, ,பாலகிருஷ்ணா, வீர சிம்ஹா ரெட்டி, வெளியீடு

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் ஜனவரி 12, 2023 அன்று வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன்பு படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மாஸ் மொகுடு பாடலின் லிரிக்கல் வீடியோ குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை 3ம் தேதி இரவு 7.55 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :