Advertisement

வீரசிம்ஹா ரெட்டி படம் முதல் நாளில் ரூ.54 கோடி வசூல் என அறிவிப்பு

By: Nagaraj Sat, 14 Jan 2023 10:58:52 PM

வீரசிம்ஹா ரெட்டி படம் முதல் நாளில் ரூ.54 கோடி வசூல் என அறிவிப்பு

ஐதாராபாத்: வீர சிம்ஹா ரெட்டி படம் முதல் நாளில் ரூ.54 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோபிசந்த் மலினேனி இயக்கிய ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


மேலும், துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

veera simha reddy,balakrishna,shruti-haasan, ,பாலகிருஷ்ணா, வீர சிம்ஹா ரெட்டி, ஸ்ருதிஹாசன்

‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் முதல் நாளில் ரூ.54 கோடி வசூல் செய்துள்ளது.

இதற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Tags :