Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தளபதி 68 படத்திற்காக கடுமையான வேலையில் இறங்கியுள்ளாராம் வெங்கட் பிரபு

தளபதி 68 படத்திற்காக கடுமையான வேலையில் இறங்கியுள்ளாராம் வெங்கட் பிரபு

By: vaithegi Fri, 17 Nov 2023 10:23:52 AM

தளபதி 68 படத்திற்காக கடுமையான வேலையில் இறங்கியுள்ளாராம் வெங்கட் பிரபு

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுயடைய 68-வது திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.இதையடுத்து இதற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், சினேகா, லைலா மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி, பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு வருகிறார்கள்.

இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், படத்தை கண்டிப்பாக வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என்று இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான வேலையில் வெங்கட் பிரபு இறங்கியுள்ளாராம். வெங்கட் பிரபு எப்போதுமே ஒரு ஜாலியான மனிதர் எனவே, படப்பிடிப்பு தளங்களில் ஜாலியாக நடந்து கொள்வதுவுண்டு.

ஆனால், இந்த தளபதி 68 படத்தின் படப்பிடிப்பில் ஜாலியாக இல்லாமல் மிகவும் சீரியஸாக வேலை செய்து கொண்டு வருகிறாராம். இதற்கு முன்னதாக அவர் சூர்யாவை வைத்து இயக்கி இருந்த மாஸ் படத்தின் படப்பிடிப்பின் போதெல்லாம் ஒரு காட்சி எடுத்த பிறகு வேகமாக கேரவனுக்கு சென்றுவிடுவாராம். அடுத்த காட்சி பற்றி சூர்யா அவரிடம் கேட்கும்போது கூட அவர் சூர்யாவின் பக்கத்தில் கூட இருக்கமாட்டாராம்.

venkat prabhu,commander 68 , வெங்கட் பிரபு ,தளபதி 68

ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லாமல் தளபதி 68 படத்தை தமிழ் சினிமாவே பார்க்க காத்துள்ளதை புரிந்துகொண்ட மிகவும் கடினமாக வேலை செய்துகொண்டு வருகிறாராம் . அனைவரும் கேரவனுக்கு சென்ற பிறகும் கூட நீண்ட நேரம் கழித்து தான் வெங்கட் பிரபு செல்கிறாராம். மேலும் அது மட்டுமில்லாமல் இப்போது ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கும் கருங்காலி மாலையை வாங்கி போட்டு இருக்கிறாராம்.

தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த மாலையை வாங்கி கழுத்தில் போட்டுகொண்டு இருக்கிறார்கள். அதற்க்கு காரணம் தங்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைக்கவும் ராசியாகவும் இருப்பதற்காக தான். அந்த வகையில், வெங்கட் பிரபுவும் கழுத்தில் அந்த கருங்காலி மாலையை வாங்கிப்போட்டு கொண்டு தளபதி 68 படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு கொண்டு வருகிறாராம்.

Tags :