Advertisement

அஜித்குமார் ரசிகர்களுடன் உரையாடும் வீடியோ வைரல்

By: Nagaraj Sun, 18 Sept 2022 11:34:33 PM

அஜித்குமார் ரசிகர்களுடன் உரையாடும் வீடியோ வைரல்

லடாக்: அஜித் வீடியோ வைரல்... லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்குமார் ரசிகர்களுடன் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகர் அஜித்குமார் திரைத்துறை தவிர மற்ற துறைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். துப்பாக்கிச் சுடுதல், சிறிய வகை ஹெலிகாப்டர் உருவாக்கம், வாகனப் பந்தயம் என பல செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. அதில் புதிதாக இணைந்துள்ளது பைக் பயணம்.

fans,enthusiasm,ajith,video,viral,ladakh ,ரசிகர்கள், உற்சாகம், அஜித், வீடியோ, வைரல், லடாக்

அவ்வப்போது தன்னுடைய வாகனத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு வரும் அஜித்குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் வெளியாகி வருகிறது. சமீபத்தில் லடாக் பகுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தப் படங்களை அஜித்குமாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பைக் பயணத்தின் மத்தியில் சாலையோரம் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுடன் உரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.


தன்னை சந்திப்பதற்காக 3 நாள்களாக தேடி அலைந்த ரசிகர்களிடம் இயல்பாக “நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?” என பேசிய வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு வெளியான நடிகர் அஜித்குமாரின் விடியோவால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags :
|
|
|
|