- வீடு›
- பொழுதுபோக்கு›
- வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் விஜய்யின் வீடியோ வைரல்
வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் விஜய்யின் வீடியோ வைரல்
By: Nagaraj Sat, 18 Nov 2023 6:08:29 PM
சென்னை: விஜய் தன்னுடைய செல்லப் பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர் நடிகர் விஜய்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ.600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தை தொடர்ந்து விஜய், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இதில் மீனாட்சி, பிரஷாந்த், பிரபு தேவா, மைக் மோகன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடந்து முடிந்து சென்னை திரும்பினார் விஜய். இந்நிலையில் விஜய் தன்னுடைய செல்லப் பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.