Advertisement

மதுபாட்டிலை ஓப்பன் செய்யும் யாஷ் –ன் வீடியோ செம வைரல்

By: Nagaraj Mon, 06 June 2022 2:54:41 PM

மதுபாட்டிலை ஓப்பன் செய்யும் யாஷ் –ன் வீடியோ செம வைரல்

கர்நாடகா: இப்போது இவர் எது செய்தாலும் செம ஹிட் ஆகி வருகிறது. யார் என்று கேட்கிறீர்களா? கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான யாஷ் தான் அவர்.

இவருடைய நடிப்பில், கடந்த 2018 ம் ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எப். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த கே.ஜி.எப் 2 திரைப்படமும் உலகளவில் சுமார் ரூ. 1,200 கோடியை தாண்டியுள்ளது.

rocky boy,party,bottle,opening,video,viral ,ராக்கி பாய், பார்ட்டி, பாட்டில், திறப்பது, வீடியோ, வைரல்

இந்நிலையில், தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் யாஷின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்ட்டியில் மது பாட்டிலை யாஷ் ஓபன் செய்யும் வீடியோ தான், தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.

ராக்கி பாய் என்றுதான் தற்போது யாஷை ரசிகர்கள் அழைக்கின்றனர். அடுத்ததாக கேஜிஎப்3 ல் மனிதர் பிஷியாகி விடுவார் என்று கூறப்படுகிறது. அதுவும் வேற லெவலில் படம் இருக்கும் என்ற தகவல்கள் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Tags :
|
|
|