Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஜவான் படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டுக்கள் தெரிவித்த விக்னேஷ் சிவன்

ஜவான் படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டுக்கள் தெரிவித்த விக்னேஷ் சிவன்

By: Nagaraj Thu, 13 July 2023 7:26:23 PM

ஜவான் படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டுக்கள் தெரிவித்த விக்னேஷ் சிவன்

சென்னை: ஜவான் படத்தின் டிரைலரை பார்த்த விக்னேஷ் சிவன், படக்குழுவினர் மற்றும் நயன்தாராவை பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கௌரி கான் தயாரித்துள்ள படம் ஜவான்.

இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.

ஹிட்டாக அமைந்தால் அங்கு அவருக்கு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜவான் படத்தின் டிரைலரை பார்த்த விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ஷாருக்கான் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நயன்தாரா சண்டை போடக் கற்றுக் கொண்டார்.

be careful,nayanthara,shah rukh khan ,, கொஞ்சம், ஜாக்கிரதை, நயன்தாரா, ஷாருக்கான்

அதனால, கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்றார் கேலியாக. இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் ஆம் ஐயா நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

படத்தில் உங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல காதல் காட்சி இருப்பதாக கேள்விப்பட்டேன், அவர் காதல் மன்னனிடம் இருந்து கற்றுக்கொண்டாள், எனவே அத்தகைய கனவில் உங்களுடன் அறிமுகமான மகிழ்ச்சியுடன் இருக்கிறார் இந்தப்படம் மிகப்பெரிய உலகளாவிய பிளாக்பஸ்டராக இருக்கும் என கூறி உள்ளார்.

Tags :