Advertisement

அஜித் படத்திலிருந்து விக்னேஷ்சிவன் விலகியதாக பரபரப்பு? உண்மை என்ன?

By: Nagaraj Sat, 28 Jan 2023 10:53:13 PM

அஜித் படத்திலிருந்து விக்னேஷ்சிவன் விலகியதாக பரபரப்பு? உண்மை என்ன?

சென்னை: அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாகவும், படத்தை விஷ்ணு வர்தன் இயக்குவார் என்றும் இணையத்தில் செய்தி பரவி வந்தது. ஆனால் இந்த தகவல் வதந்தி என கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து மூன்று முறை அஜித் எச். வினோத்துடன் பணிபுரிந்துள்ளார். ‘துணிவு’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘ஏகே62’ படத்தில் நடிக்கிறார் அஜித். ஜித். நடிகர் அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே கூட்டணியில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக ‘வலிமை’ படம் வெளியானது. இந்த கூட்டணியின் மூன்றாவது படைப்பாக கடந்த 11ம் தேதி வெளியான ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ajith,ak 62,vignesh sivan,vishnu vardhan, ,அஜித், ஏகே 62, விக்னேஷ் சிவன், விஷ்ணு வர்தன்

முதல் பாதி முழுவதும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாகவும், இரண்டாம் பாதி மக்களுக்கு வங்கி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாகவும், படத்தை விஷ்ணு வர்தன் இயக்குவார் என்றும் இணையத்தில் செய்தி பரவி வந்தது. ஆனால் இந்த தகவல் வதந்தி என கூறப்படுகிறது.

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் ‘தளபதி 67’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘ஏகே 62’ படத்தில் அஜித்துடன் அரவிந்த் சாமி, சந்தானம், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|